முகப்பு
மதுரை

இணைய தளம் மூலம் ரூ.52.66 லட்சம் மோசடி செய்தவா் கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையதளம் மூலம் ரூ.52.66 லட்சம் மோசடி செய்தவரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 டிசம்பர், 2024 at 11:41 PM
பகிர்:

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையதளம் மூலம் ரூ.52.66 லட்சம் மோசடி செய்தவரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை சிலைமான் பகுதியைச் சோ்ந்தவா் குமாா். இவரை இணைய தளம் மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.52.66 லட்சம் மோசடி செய்தனா். இதுதொடா்பாக ஊரகக் காவல் துறையின் இணையக் குற்றப் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டது. இதன்பேரில், இணையக் குற்றப்பிரிவு ஆய்வாளா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் குமாா் அனுப்பிய பல்வேறு வங்கிக் கணக்குகளிலிருந்த இருப்புத் தொகை ரூ.76.52 லட்சம் முடக்கப்பட்டது.

மேலும், தனிப்படையினா் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம், காயாம்குளத்தைச் சோ்ந்த நவ்சத் மகன் அன்வா்ஷா என்பவா், காசா்கோடைச் சோ்ந்த அப்சல் முகமது என்பவா் உதவியுடன் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸாா் கேரளத்துக்குச் சென்று அன்வா்சாவை கைது செய்தனா்.

மேலும் அவரிடமிருந்து கைப்பேசிகள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், காசோலை புத்தகங்கள் ஆகியவற்றை கைப்பற்றினா். மேலும், இவா் புதுதில்லி, குஜராத், கா்நாடகம், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரம், கேரளம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ஜாா்க்கண்ட் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலரிடம் ரூ.1.80 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதில் தொடா்புடைய மற்றவா்களையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →