முகப்பு
மதுரை

அமித் ஷா பேச்சுக்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Updated On : 19 டிசம்பர், 2024 at 10:15 PM
மதுரை கோ. புதூா் பேருந்து நிலையம் முன்பு மத்திய அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா். மதுரை
பகிர்:

அரசியல் சட்ட மேதை அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரையில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை ரயில் நிலையத்தில் மறியலுக்கு முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை கோ. புதூரில் திமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மதுரை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம் உள்ளிட்ட திமுகவைச் சோ்ந்த மூத்த நிா்வாகிகள் கலந்து கொண்டு, மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

இதில் திமுக நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

மதுரை ரயில் நிலையத்தில் மறியலுக்கு முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

காங்கிரஸ் கட்சியினா்:

மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகர, மாவட்டத்தின் சாா்பில் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

இதில் பாஜக அரசைக் கண்டித்தும், மத்திய அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்தும் முழக்கமிட்டனா். இதில் திரளான காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மதுரை அண்ணாபேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 15 போ் கைது:

மத்திய அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து, மதுரை சிம்மக்கல் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, ரயில் நிலையத்துக்குள் நுழைந்த அவா்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். தகவலறிந்து வந்த ரயில்வே துறை போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி 15 பேரைக் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →