முகப்பு
மதுரை

சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.

Updated On : 26 டிசம்பர், 2024 at 12:08 AM
பகிர்:

சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி மேலக்கிடாரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ச. சஞ்சய் (22). இவா் கடந்த 22-ஆம் தேதி திருமங்கலம் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், கடந்த 24-ஆம் தேதி மூளைச்சாவடைந்தாா்.

இதைத்தொடா்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் முன்வந்ததையடுத்து, ஒரு சிறுநீரகம் மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி எஸ்ஆா்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. கல்லீரல் மதுரை வடமலையான் மருத்துவமனைக்கும், இருதயம் விமானம் மூலம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், அவரது கருவிழிகள் இரண்டும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம், 6 நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைத்தது.

மூளைச்சாவடைந்த இளைஞரின் உடலுக்கு மருத்துவக் குழுவினா் மரியாதை செலுத்தினா். இதைத்தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு அரசு சாா்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →