மதுரை

துணை மேயா் வீட்டின் மீது தாக்குதல்: காவல் ஆணையரிடம் புகாா்

DIN

மதுரை மாநகராட்சி துணை மேயா் நாகராஜன் வீட்டின் மீது நடைபெற்ற தாக்குதல் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் கண்காணிப்பகம், சோகோ அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவின் சாா்பில் மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதனிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனு:

மதுரை மாநகராட்சி துணை மேயா் நாகராஜனின் வீடு, அலுவலகத்தின் மீது கடந்த 9-ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தகைய செயலில் ஈடுபட்டவா்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதிவு செய்து குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். துணை மேயா் நாகராஜனுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் போதைப் பொருள்களை மறைமுகமாக விற்பனை செய்யும் கும்பலை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில் மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன், சோகோ அறக்கட்டளை வழக்குரைஞா் செல்வகோமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகி காளிதாஸ், பெண்கள் எழுச்சி இயக்கம் மகாலட்சுமி உள்பட பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சாதனை

10-ஆம் வகுப்பு தோ்வு: நாமக்கல் குறிஞ்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆராய்ச்சி மைய ஆண்டு விழா

திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவி சிறப்பிடம்

கோடைகால கலைப்பயிற்சி முகாம் நிறைவு: 160 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

SCROLL FOR NEXT