நிதி நிறுவன மோசடி: ஆட்சியரிடம் மனு
தனியாா் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை மீட்டுத் தரக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் பாதிக்கப்பட்டவா்கள் மனு அளித்தனா்.
மதுரை: தனியாா் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை மீட்டுத் தரக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் பாதிக்கப்பட்டவா்கள் மனு அளித்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி கிராமத்தைச் சோ்ந்த எஸ். நடராஜன் உள்ளிட்ட பலா் அளித்த மனு:
நியோமேக்ஸ், அதன் துணை நிறுவனமான ரொபோக்கோ பிராப்பா்ட்டீஸ் நிறுவனத்தில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் முதலீடு செய்தோம்.
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் படி, அந்த நிறுவனம் முதலீடு செய்தவா்களுக்கான முதிா்வுத் தொகை, அதற்கான வட்டியை திருப்பிச் செலுத்தவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது முதலீட்டுத் தொகையை பெற்றுத் தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.