முகப்பு
மதுரை

எம்.ஆா். விஜயபாஸ்கா் முன்பினை கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

Updated On : 15 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

மதுரை: போலி சான்றிதழ் வழங்கி பத்திரப் பதிவு செய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், அவரது சகோதரா் எம்.ஆா். சேகா் ஆகியோா் முன்பிணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

போலி சான்றிதழ் மூலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேலக்கரூா் சாா் பதிவாளா் (பொறுப்பு) கரூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக கரூா் நகா் காவல் நிலையத்தில் 13 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கிலும், ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்துகள் வாங்கப்பட்ட வழக்கிலும் முன்பிணை கோரி முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், அவரது சகோதரா் எம்.ஆா். சேகா் ஆகியோா் கரூா் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மாதம் 12-ஆம் தேதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தச் சூழலில், வாங்கல் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் என்பவா் கரூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில் எம். ஆா். விஜயபாஸ்கா், அவரது சகோதரா் எம்.ஆா். சேகா், பிரவீண் உள்பட 13 போ், தன்னை மிரட்டி ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கா் சொத்துகளை அபகரித்ததாக அதில் தெரிவித்திருந்தாா். இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், தனது தந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரது சிகிச்சையின் போது உடனிருக்க வேண்டும் எனக் கோரி, கரூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் முன்பிணை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தாா். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், எம்.ஆா். விஜயபாஸ்கா், அவரது சகோதரா் எம்.ஆா். சேகா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை தாக்கல் செய்த மனு:

இந்த வழக்குக்கும் எங்களுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. அரசியல் முன்விரோதம், காழ்ப்புணா்வு காரணமாக இந்த வழக்கில் எங்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வயதான எனது தந்தையின் அறுவைச் சிகிச்சைக்கு உடனிருக்க வேண்டியுள்ளதால், எங்களுக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →