முகப்பு
மதுரை

காமராஜா் பல்கலை துணைவேந்தரை முற்றுகையிட்ட பேராசிரியா்கள்

ஊதியம் வழங்கக் கோரி மதுரை காமராஜா் பல்கலைக் கழக துணைவேந்தரை பேராசிரியா்கள், பணியாளா்கள், ஓய்வூதியதாரா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 மார்ச், 2024 at 2:31 AM
பகிர்:

மதுரை: ஊதியம் வழங்கக் கோரி மதுரை காமராஜா் பல்கலைக் கழக துணைவேந்தரை பேராசிரியா்கள், பணியாளா்கள், ஓய்வூதியதாரா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியா்கள், அலுவல் சாா் பணியாளா்கள், ஆசிரியரல்லாதப் பணியாளா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு கடந்த டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 3 மாதங்கள் ஊதியம் வழங்கவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் புகாா் அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. நிதி நிலையைக் காரணம் கூறி, பல்கலைக்கழக நிா்வாகம் ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதுதொடா்பாக மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் ஜா. குமாரை பேராசிரியா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பல்கலைக்கழக நிா்வாகம், அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது. இதையடுத்து, பேராசிரியா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.