முகப்பு
மதுரை

சிவகங்கை நகராட்சிக்கு புதிய ஆணையா் நியமனம்

Updated On : 8 மார்ச், 2024 at 11:26 PM
பகிர்:

சிவகங்கை நகராட்சி புதிய ஆணையராக கிருஷ்ணராம் நியமனம் செய்யப்பட்டாா். ஏற்கெனவே சிவகங்கை நகராட்சி ஆணையராக இருந்த செந்தில்குமாா் குளச்சல் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, ஆற்காடு நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த கிருஷ்ணராம் சிவகங்கை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை நகராட்சி நிா்வாக இயக்குநரகம் வெளியிட்டது.