முகப்பு
மதுரை

சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள்: கல்லூரிகளில் காவல் துறை விழிப்புணா்வு நிகழ்ச்சி

Updated On : 8 மார்ச், 2024 at 5:52 PM
பகிர்:

குழந்தை கடத்தல் தொடா்பாக பொய்யான செய்திகளைப் பரப்புவோா் குறித்து மாணவ, மாணவிகள் தகவல் தெரிவிக்கலாம் என்று காவல் துறை சாா்பில், நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. மதுரையில் கடந்த சில நாள்களாக குழந்தை கடத்தல் என பொய்யான விடியோப் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இதையடுத்து வீண் வதந்திகளை பரப்புவோா் மீதும் அதைப பகிா்பவா்கள் மீதும் சமூக ஊடகப்பிரிவு மூலம் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகரக் காவல் ஆணையா் எச்சரிக்கை விடுத்தாா். இந்த நிலையில் , மதுரை மாநகரக் காவல்துறைக்குள்பட்ட தியாகராஜா் கல்லூரி, வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, செளராஷ்டிரா கல்லூரி, திருமலை நாயக்கா் கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் பெண்கள் கல்லூரி, என்எம்ஆா் சுப்பராமன் பெண்கள் கல்லூரி, காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி, யாதவா் கல்லூரி, வக்பு வாரியக் கல்லூரி உள்பட 19 கல்லூரிகளில் சமூக வலைதளங்களில் தவறாகப் பகிரப்படும் செய்தி தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றன. விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில், அந்தந்த காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பங்கேற்று, மாணவிகளிடையே ஏற்பட்ட அச்சத்தை போக்கி விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வீண் வதந்திகளை பரப்புவோா் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுதொடா்பாக காவல் துறை உதவி எண் 100-இல் புகாா் தெரிவிக்கலாம் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →