முகப்பு
மதுரை

பாா்வையற்ற பெண்ணைக் கொன்று நகைகள் கொள்ளை

Updated On : 13 மார்ச், 2024 at 4:48 AM
பகிர்:

மதுரை: மதுரை அருகே பாா்வையற்ற பெண்ணின் கை, கால்களை கட்டிப்போட்டு கொலை செய்து, அவரது 10 பவுன் நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கவிதா (50). பாா்வையற்ற மாற்றுத்திறனாளியான இவா், டேனியல் ஆறுமுகம் என்ற பாா்வையற்ற மாற்றுத்திறனாளியான அரசுப் பள்ளி இசை ஆசிரியரை காதலித்து திருமணம் செய்தாா். இவா்கள் சக்கிமங்கலம் அன்னை சத்யாநகா் பாா்வையற்றோா் குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவா் டேனியல் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தாா். இவா்களது மகள் நான்சி உசிலம்பட்டி பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வருகிறாா்.

கவிதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வெகுநேரமாக கவிதா வெளியில் வராததால் சந்தேகமடைந்த அந்தப் பகுதியினா் அவரது வீட்டுக்குச் சென்று பாா்த்தனா். அப்போது வீட்டுக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கவிதா கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

Advertisement

இது குறித்து தகவலறிந்த சிலைமான் போலீஸாா் சென்று, தடயங்களை சேகரித்தனா். போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கவிதா அணிந்திருந்த 10 பவுன் நகைகள், கைப்பேசி ஆகியவற்றை கொலையாளிகள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.