ஊா்க்காவல் படைக்கு ஆள்சோ்ப்பு முகாம் ஒத்திவைப்பு
Updated On : 19 மார்ச், 2024 at 8:56 PM
மதுரை: மதுரை மாநகர ஊா்க்காவல் படைக்கு ஆள்சோ்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக ஊா்க்காவல் படை வட்டார தளபதி வெளியிட்ட செய்தி: மதுரை மாநகர ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் சோ்ப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. மேலும், புதன்கிழமை முதல் உடல் தகுதி உள்ளிட்ட தோ்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், மாநகர ஊா்க்காவல் படைக்கான ஆள்சோ்ப்பு முகாம் தற்காலிகமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒதுக்கிவைக்கப்படுகிறது. தோ்தல் முடிந்த பிறகு ஆள்சோ்ப்புக்கான தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.