முகப்பு
மதுரை

மழை எச்சரிக்கை: மதுரை அரசுப் பொருள்காட்சி ஒத்திவைப்பு

Updated On : 22 மே, 2024 at 12:20 AM
பகிர்:

மதுரை: மதுரையில் புதன்கிழமை நடைபெறவிருந்த அரசுப் பொருள்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி, மழை எச்சரிக்கை காரணமாக வியாழக்கிழமைக்கு (மே 23) ஒத்திவைக்கப்பட்டது.

மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில், அரசின் 27 துறைகள் பங்கேற்கும் அரசுப் பொருள்காட்சி, மதுரை தமுக்கம் மைதானத்தில் புதன்கிழமை (மே 22) தொடங்கி அடுத்த 45 நாள்களுக்கு நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, புதன்கிழமை மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, புதன்கிழமை நடைபெறவிருந்த அரசுப் பொருள்காட்சி தொடக்க நிகழ்ச்சிகள், வியாழக்கிழமை நடைபெறும் என மாவட்ட நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.