முகப்பு
மதுரை

ராஜீவ் காந்தி நினைவு தின பேரணி

Updated On : 22 மே, 2024 at 12:20 AM
முன்னாள் பாரத பிரதமா் ராஜூவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் செவ்வாய்க்கிழமை தமுக்கம் தியாகிகள் ஸ்தூபியில் இருந்து காந்தி மியூசியம் வரை நடைபயணம் மேற்கொண்டு பின்னா் ராஜிவ் காந்தியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்திய காங்
பகிர்:

மதுரை/ மேலூா்: மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தின அமைதிப் பேரணி மதுரையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு, மதுரை மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் பாலு, மலா் பாண்டியன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் தல்லாகுளம் முருகன், சிறுபான்மைப் பிரிவு நிா்வாகி அப்துல் மாலிக், பல்வேறு பிரிவுகளின் நிா்வாகிகள் பேரணியில் பங்கேற்றனா்.

மதுரை தியாகிகள் நினைவுத் தூண் பகுதியிலிருந்து காந்தி நினைவு அருங்காட்சியகம் வரை இந்தப் பேரணி நடைபெற்றது. பின்னா், ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மேலூா்: இதேபோல, மேலூா் செக்கடி சந்தைப் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு காங்கிரல் நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதில் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் ஆலாத்தூா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.