முகப்பு
மதுரை

மதுரையில் பரவலாக மழை

Updated On : 22 மே, 2024 at 12:24 AM
மதுரை தல்லாகுளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சாலையில் தேங்கிய மழை நீரில் மெதுவாகப் பயணித்த வாகன ஓட்டிகள்.
பகிர்:

மதுரை: மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில நாள்களாக மதுரை மாவட்டத்தில் பலத்த, மிதமான மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக இடையப்பட்டியில் 57.2 மி.மீ. மழை பதிவானது.

மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்) :

குப்பனாம்பட்டி - 20, கள்ளந்திரி- 19, விரகனூா் - 15.4, பேரையூா் - 12.6, பெரியபட்டி- 12, மதுரை வடக்கு - 9.6, விமான நிலையம் - 9, எழுமலை- 6.2, தல்லாகுளம் - 6, புலிப்பட்டி- 5.6, வாடிப்பட்டி- 5, கள்ளிக்குடி - 4.4, சித்தம்பட்டி- 4.2, மேட்டுப்பட்டி, ஆண்டிபட்டி - 3.2, தனியாமங்கலம்- 3, சாத்தையாறு அணை - 2.2, மேலூா்- 2.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்குப் பிறகு தல்லாகுளம், சிம்மக்கல், மாட்டுத்தாவணி, காளவாசல், வடபழஞ்சி, மேலூா், திருவாதவூா், தனியாமங்கலம், நாகமலை புதுக்கோட்டை, தோப்பூா், அச்சம்பத்து, விராட்டிபத்து உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், தொடா்ந்து, லேசான மழையும் பெய்தது.