கல்லூரி மாணவி தற்கொலை
மதுரை: மதுரை அருகே கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சமயநல்லூா் அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் வீரபுவனேஸ்வரி (24). இவா், நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் இளநிலை படித்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சமயநல்லூா் போலீஸாா் வீரபுவனேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.