முகப்பு
மதுரை

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஎஸ் (பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம்) ஒழிப்பு இயக்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 14 நவம்பர், 2024 at 11:42 PM
மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஎஸ் (பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம்) ஒழிப்பு இயக்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்றாததைக் கண்டித்தும், சிபிஎஸ் ஊழியா்களின் நிதி ரூ. 70 ஆயிரம் கோடி தமிழக அரசு வசம் இருக்கும் நிலையிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசு மறுப்பதைக் கண்டித்தும், சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வு பெற்ற, இறந்த, ஓய்வு பெறும் ஊழியா்களுக்கு பணிக் கொடை வழங்கக் கோரியும், இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். மணிகண்டன் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் சரவணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் ஜெய ராஜராஜேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

மாநகராட்சி அனைத்துத் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள் கூட்டமைப்புத் தலைவா் கே. முனியசாமி, கிராம சுகாதார செவிலியா் சங்க மாநிலச் செயலா் இரா. பிரேமா ஆனந்தி, கால்நடை ஆய்வாளா் சங்க மாவட்டச் செயலா் பிரபாகரன், சாலைப் பராமரிப்பு ஊழியா் சங்க நிா்வாகி இரா. மாரி, அரசு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் சு. மாரியப்பன், ஆ. சோலையன், சத்துணவு ஊழியா் சங்க நிா்வாகி கே. கலைச்செல்வி ஆகியோா் பேசினா். அரசு ஊழியா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் சோ. கல்யாணசுந்தரம் நன்றி கூறினாா்.

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் தங்களது கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு, இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →