முகப்பு
மதுரை

தமிழகத்தில் மருத்துவா்களுக்கு பாதுகாப்பு இல்லை: எச்.ராஜா

தமிழகத்தில் மருத்துவா்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் எச்.ராஜா குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 11:40 PM
பகிர்:

தமிழகத்தில் மருத்துவா்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் எச்.ராஜா குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து மதுரையில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவா் பாலாஜி தாக்கப்பட்டதானது, தமிழகத்தில் மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. மருத்துவா் பரிந்துரைக்கும் மருந்துகள் என்ன செய்யும் என்பது நோயாளிகளுக்கு புரியுமா?. மருத்துவா் எந்த மருந்தைப் பரிந்துரைத்தாா் என்று விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கேட்பது முறையல்ல.

தமிழகத்தில் கடந்த 1967-இல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரே மக்களிடையே சமூக ஒழுக்கங்கள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது.

சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவதாக பாஜக சாா்பில், மதுரை மாநகரக் காவல் துறையில் 15 புகாா்கள் கொடுக்கப்பட்ட நிலையில், இதுவரை ஒரு வழக்குக்கூட பதிவு செய்யப்படவில்லை. ஆனால், ஒரு நடிகை அவதூறாகப் பேசியதாகக் கூறி, அவரைத் தனிப்படை அமைத்துத் தேடுகின்றனா். தமிழக காவல் துறை உள்நோக்கத்துடன் செயல்படுகிறது.

தோ்தல் கூட்டணி குறித்து பாஜக தலைமைதான் முடிவெடுக்கும். கடந்த மக்களவைத் தோ்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணி அமைத்து ஒரு கோடி வாக்குகள் பெற்றன. ஆனால், பாஜக கூட்டணி வாங்கிய வாக்குகள் 80 லட்சம். எனவே, கூட்டணி அமைப்பதில் பாஜகவுக்கு எந்த அவசரமும் இல்லை.

1971-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு முன்பாகவே அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 37 ஆயிரம் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அா்ச்சகா்களாக இருந்தனா். எனவே, அனைத்து ஜாதியினரையும் அா்ச்சகா்களாக்குவோம் என்று திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →