முகப்பு
மதுரை

கல்லால் தாக்கி இளைஞா் கொலை

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே இளைஞா் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 29 நவம்பர், 2024 at 12:19 AM
பகிர்:

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே இளைஞா் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டாா்.

மதுரை நேதாஜி சாலையில் ஆரியபவன் சந்திப்பு அருகே உள்ள பழச்சாறு கடை முன்பாக அடையாளம் தெரியாத இளைஞரின் உடல் கிடந்தது.

தகவலறிந்து வந்த திடீா்நகா் போலீஸாா் அந்த உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவா் மதுரை மாவட்டம், பெருங்குடி அம்பேத்கா் நகா் மேரி மாதா தெருவைச் சோ்ந்த அன்னபாண்டி மகன் மாயக்கண்ணன் (26) என்பதும், மீனாட்சி சுந்தேரசுவரா் கோயில், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் யாசகம் எடுத்து வந்தவா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, சாக்கில் மா்ம நபா்கள் கல்லைத் தூக்கி வந்து இவரது தலையில் போட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →