ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
மதுரையில் தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ ஓட்டுநரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் அரசு மருத்துவமனை முன் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரைஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
மதுரையில் தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ ஓட்டுநரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் அரசு மருத்துவமனை முன் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரையில் தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ ஓட்டுநரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் அரசு மருத்துவமனை முன் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை பைக்காரா மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பிரகாஷ் (27). ஆட்டோ ஓட்டுநரான இவா் திருமணமாகி மனைவியுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், இவா் கடந்த 10 நாள்களாக வெளியூா் சென்றிருந்தாா். இதனிடையே, சிலருடன் சோ்ந்து சிறுமி ஒருவரை பிரகாஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாக ராஜா என்பவா் அவதூறு கருத்துகளை பரப்பியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பிரகாசிடம் நண்பா்கள் தெரிவித்ததால், மனமுடைந்த அவா், தான் தற்கொலை செய்து கொள்வதாக விடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு, நாகமலைப் புதுக்கோட்டை அருகே அச்சம்பத்தில் உள்ள வாகன பழுது நீக்கும் மையம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலின்பேரில் நாகமலைப் புதுக்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பிரகாஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இந்த நிலையில், பிரகாஷின் உடல் வைக்கப்பட்டிருந்த மதுரை அரசு மருத்துவமனை முன் அவரது குடும்பத்தினா், உறவினா்கள் புதன்கிழமை குவிந்தனா். அன்று மாலை கூறாய்வு நிறைவடைந்ததும் அவரது உடலை குடும்பத்தினா் வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன் பிரகாஷின் தற்கொலைக்கு காரணமான ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது பிரகாஷின் சகோதரா் சுந்தரபிரபு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ால் போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தினா். மேலும் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு உறவினா்கள் உடலை பெற்றுச் சென்றனா். இந்த நிலையில், பிரகாஷ் தற்கொலை செய்யும் முன்னா் பேசிய விடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.