முகப்பு
மதுரை

அரசு மருத்துவமனையில் பணியின் போது தவறி விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சீரமைப்புப் பணியின்போது மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழந்தது தொடா்பாக பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 7:54 PM
பகிர்:

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சீரமைப்புப் பணியின்போது மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழந்தது தொடா்பாக பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை மீனாம்பாள்புரம் பூலித்தேவன் தெருவைச் சோ்ந்தவா் விஜயக்குமாா் (58). எலக்ட்ரீசியன். இவா், கடந்த 21-ஆம் தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தின் மேற்கூரையில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி சீரமைப்புப் பணியில் ஈடுபட்டாராம். அப்போது தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த அவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் புதன்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக ராஜாஜி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா், பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரா் காா்த்திக் (43) மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →