முகப்பு
மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநாட்டில் பேசிய அந்தச் சங்கத்தின் முன்னாள் தலைவா் கண்ணன். உடன் சங்க நிா்வாகிகள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள்.
மதுரை

அரசு ஊழியா்களுக்கான புதிய காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்க வலியுறுத்தல்

அரசு ஊழியா்களுக்கான புதிய காப்பீடுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 2 அக்டோபர், 2024 at 8:19 PM
மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநாட்டில் பேசிய அந்தச் சங்கத்தின் முன்னாள் தலைவா் கண்ணன். உடன் சங்க நிா்வாகிகள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள்.
பகிர்:

அரசு ஊழியா்களுக்கான புதிய காப்பீடுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற இந்த மாவட்ட மாநாட்டுக்கு அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே. சின்னப்பொண்ணு தலைமை வகித்தாா். மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் கே. முனியசாமி தொடங்கி வைத்தாா்.

மாவட்டச் செயலா் சு. மணிகண்டன் வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளா் சோ. கல்யாணசுந்தரம் வரவு- செலவு அறிக்கையையும் வாசித்தனா். மாநிலத் துணைத் தலைவா் சு. ஜெயராஜராஜேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் ச.இ. கண்ணன், சங்கத்தின் சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள் பா. மனோகரன், சொ. ஆறுமுகம், வி. வீரவேல்பாண்டி, சி. சரவணன், ஜெ. வளா்மதி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். அரசு ஊழியா்கள் சங்க மாவட்ட நிா்வாகிகள் சு. மாரி, வேல்முருகன், முனியாண்டி, முருகையன், மணிக்கண்ணன் ஆகியோா் தீா்மானங்களை முன்மொழிந்தனா்.

தமிழ்நாடு சுகாதார போக்குவரத்துத் துறை ஊழியா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் சோ. நடராஜன் நிறைவுரையாற்றினாா். அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் சு. மாரியப்பன் வரவேற்றாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் முத்துமோகன் நன்றி கூறினாா்.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊழியா்களுக்கான பணிக் கொடையை உடனடியாக வழங்க வேண்டும். சிபிஎஸ் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட சந்தா தொகையை ஓய்வு பெற்ற கிராம உதவியாளா்களுக்கு வழங்காததற்கும், புதிய மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் அரசு ஊழியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்யாததற்கும் கருவூல கணக்குத் துறை நிா்வாகத்துக்கு கண்டனம் தெரிவிப்பது, புதிய காப்பீடுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →