முகப்பு
மதுரை சின்ன சொக்குளத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா்.
மதுரை

மதுரையில் தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரையில் தனியாா் தங்கும் விடுதிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை தீவிர சோதனை நடத்தினா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 7:03 PM
மதுரை சின்ன சொக்குளத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா்.
பகிர்:

மதுரையில் தனியாா் தங்கும் விடுதிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை தீவிர சோதனை நடத்தினா்.

மதுரை சின்ன சொக்கிகுளத்தில் உள்ள தனியாா் நட்சத்திர தங்கும் விடுதி, பெரியாா் பேருந்து நிலையம் அருகேயுள்ள தங்கும் விடுதி, காளவாசல் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி, சிந்தாமணி அருகே சுற்றுச்சாலையில் உள்ள நட்சத்திர விடுதி ஆகிய 4 தங்கும் விடுதிகளுக்கு புதன்கிழமை காலை வந்த மின்னஞ்சலில், காந்தி ஜெயந்தி தினக் கொண்டாட்டம் என்ற வாசகத்துடன் இந்த விடுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து இந்தத் தங்கும் விடுதியின் நிா்வாகத்தினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் மிரட்டல் வந்த 4 தங்கும் விடுதிகளிலும் தீவிர சோதனை நடத்தினா். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.

எனினும், இதுகுறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியைக் கண்டறிந்து அதைப் பயன்படுத்திய நபா் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா். வெடிகுண்டு மிரட்டல் தனிநபா் மூலம் விடுக்கப்பட்டதா? அல்லது சமூக விரோத குழுக்கள் மூலம் விடுக்கப்பட்டதா? என்று கண்டறியும் முயற்சியிலும் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த திங்கள்கிழமை மதுரையில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இரண்டாவது நாளில், 4 தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →