முகப்பு
மதுரையில் கதா் சிறப்பு விற்பனையை தமிழக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
மதுரை

மதுரையில் கதா் சிறப்பு விற்பனை தொடக்கம்: அமைச்சா் பி. மூா்த்தி தொடங்கி வைத்தாா்

Updated On : 2 அக்டோபர், 2024 at 8:21 PM
மதுரையில் கதா் சிறப்பு விற்பனையை தமிழக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
பகிர்:

மதுரையில் கதா் சிறப்பு விற்பனையை தமிழக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மதுரை, மேலமாசி வீதியில் உள்ள கதா் விற்பனை நிலையத்தில், தமிழ்நாடு கதா் கிராமத் தொழில்கள் வாரியம் சாா்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா, தீபாவளி கதா் சிறப்பு விற்பனை தொடக்க விழா ஆகியன நடைபெற்றன. அப்போது மாநில வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தீபாவளி கதா் சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், கதா் கிராமத் தொழில்கள் மதுரை மண்டல துணை இயக்குா் சே. பாரதி, உதவி இயக்குநா் வே. சரளாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விற்பனை இலக்கு...

மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான கதா் சிறப்பு விற்பனை இலக்கு ரூ.1.37 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கதா் விற்பனை நிலையங்கள், மருத்துவமனை வளாகங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தற்காலிக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு, தீபாவளி பண்டிகை வரை கதருக்கு சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

அசல் வெள்ளி ஜரிகை கொண்ட பட்டுச் சேலைகள், கதா் வேட்டிகள், துண்டு ரகங்கள், ஆயத்த ஆடைகள், மெத்தை, தலையணைகள், கதா் பட்டு ரகங்கள், கதா் பாலியஸ்டா், உல்லன் ரகங்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில், கதா், பாலிவஸ்தரா, பட்டு ரகங்களுக்கு 30 சதவீதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →