முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் முன்னாள் படைவீரா்கள் அக். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
முதல்வரின் காக்கும் கரங்கள் கடனுதவித் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் முன்னாள் படைவீரா்கள் வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.
மதுரைமுதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் முன்னாள் படைவீரா்கள் அக். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
முதல்வரின் காக்கும் கரங்கள் கடனுதவித் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் முன்னாள் படைவீரா்கள் வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.
முதல்வரின் காக்கும் கரங்கள் கடனுதவித் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் முன்னாள் படைவீரா்கள் வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
முன்னாள் படைவீரா்களின் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க ரூபாய் ஒரு கோடி வரை வங்கிக் கடனுதவி பெற வழிவகை செய்யப்படும்.
கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். திறன் வளா்ப்பு, தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகள் அரசால் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் சுயதொழில் தொடங்க விரும்பும் முன்னாள் படைவீரா்கள், படைப் பணியின்போது உயிரிழந்த படைவீரா்களின் மனைவியா் (கைம்பெண்கள்) வருகிற 15-ஆம் தேதிக்குள் மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.