முகப்பு
மதுரை

போலி பட்டா வழங்கிய விவகாரம்: மதுரை ஆட்சியா் உயா்நீதிமன்றத்தில் ஆஜா்

மதுரை அருகே போலி பட்டா வழங்கிய விவகாரத்தில், வருவாய்த் துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?.

Updated On : 3 அக்டோபர், 2024 at 9:45 PM
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

மதுரை அருகே போலி பட்டா வழங்கிய விவகாரத்தில், வருவாய்த் துறை அதிகா கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?. இது குறித்து உயா்நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையான மாவட்ட ஆட்சியரிடம் உரிய விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சாவித்திரி உள்பட பலா் தாக்கல் செய்த மனுக் கள்:

மதுரை நிலையூா் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, 20-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தோம். ஆனால், அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்தோம். இதையடுத்து, 17 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து, 17 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவை மாவட்ட நிா்வாகம் வழங்கியது. இந்த இடங்களில் வீடுகள் கட்ட சென்ற போது, சிலா் தடுத்தனா். இதையடுத்து, காவல் நிலையத்தில் புகாா் அளித்தோம்.

போலீஸ் விசாரணையில், 17 பேருக்கு அரசு வழங்கிய இலவச பட்டா செல்லாது என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இலவச வீட்டு மனை வழங்கப்பட்டும், வீடுகள் இல்லாமல் 17 குடும்பத்தினரும் தவித்து வருகிறோம். எனவே, தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச வீட்டு மனைப் பட்டாவில், போலி பட்டா வழங்கிய மதுரை மாவட்ட ஆட்சியா் மீது நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தனா்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, மனுதாரா்கள் கோரிக்கை தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. டி. ஆஷா முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியா் ம.செள. சங்கீதா நீதிமன்றத்தில் முன்னிலையானாா்.

இதையடுத்து, உயா்நீதிமன்ற நீதிபதி பி. டி. ஆஷா பிறப்பித்த உத்தரவு:

போலி பட்டா வழங்கியது தொடா்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →