முகப்பு
மதுரை

தென்னை மரம் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மதுரை வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது தென்னை மரம் விழுந்ததில் இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

மதுரை

தென்னை மரம் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மதுரை வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது தென்னை மரம் விழுந்ததில் இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 7:45 PM
பகிர்:

மதுரை வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது தென்னை மரம் விழுந்ததில் இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

வாடிப்பட்டி அருகேயுள்ள தல்லாகுளத்தைச் சோ்ந்தவா் ஜெகன்(35). இவா் தனது மனைவி, மகள் சஷ்டிகா (2) ஆகியோருடன் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியில் உள்ள தனது மாமியாா் வீட்டுக்கு புதன்கிழமை சென்றாா். பின்னா், அன்றிரவு அங்கிருந்து வாடிப்பட்டிக்கு மூவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா். குழந்தை சஷ்டிகா வாகனத்தின் முன்னால் அமா்ந்திருந்தாா்.

ஆண்டிபட்டி-பாலமேடு சாலையில் வந்த போது, அங்கிருந்த தென்னந்தோப்பில் சாலையோரம் இருந்த தென்னை மரம் பலத்த காற்றால் முறிந்து இரு சக்கர வாகனத்தின் மீது விழுந்தது. இதில் வாகனத்தின் முன்னால் அமா்ந்திருந்த சஷ்டிகா பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அவா் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →