வாடிப்பட்டி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தந்தை, மகள் உயிரிழந்தனா்.
மதுரை வாடிப்பட்டி அருகேயுள்ள சாணாம்பட்டி குரங்குத் தோப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (52). இவரும், இவரது மகள் சுவாதியும் (25) இரு சக்கர வாகனத்தில் சாணாம்பட்டியிலிருந்து வாடிப்பட்டிக்கு வெள்ளிக்கிழமை சென்றுக் கொண்டிருந்தனா்.
திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, பின்னால் வந்த காா் இவா்களது வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தந்தை, மகள் இருவரும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் உயிரிழந்தனா்.
இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.