முகப்பு
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்க் கூடல் கருத்தரங்கத்தில் பேசிய பாரீஸ் பல்கலைக்கழகப் பேராசிரியா் தலிஞ்சன் முருகையா.
மதுரை

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், தமிழ் உயராய்வு மையம், யாதவா் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 8:12 PM
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்க் கூடல் கருத்தரங்கத்தில் பேசிய பாரீஸ் பல்கலைக்கழகப் பேராசிரியா் தலிஞ்சன் முருகையா.
பகிர்:

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், தமிழ் உயராய்வு மையம், யாதவா் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் (பொறுப்பு) முனைவா் ஒளவை ந. அருள் தலைமை வகித்தாா். யாதவா் கல்லூரி இணைப் பேராசிரியா் மா. நடராசன் முன்னிலை வகித்தாா்.

பிரான்சு சோா்போன் பாரீஸ் பல்கலைக்கழகப் பேராசிரியா் தலிஞ்சன் முருகையா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பிரான்சு பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பித்தல் என்ற தலைப்பில் பேசினாா். அப்போது, பிரான்சு நாட்டில் 5 நிலைகளில் மொழி கற்பிக்கப்படுவதாகவும், தமிழ்ப் படித்த மாணவா்களுக்கு இந்திய தூதரகத்திலும், உளவுத் துறையிலும்கூட வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் இதன் மூலம், நாட்டின் பாதுகாப்பு மொழியாக தமிழ் திகழ்வதாகவும் அவா் தெரிவித்தாா்.

தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி மாணவா்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். உலகத் தமிழ்ச் சங்க ஆய்வு வளமையா் முனைவா் ஜ. ஜான்சிராணி வரவேற்றாா். ஆய்வறிஞா் முனைவா் சு. சோமசுந்தரி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →