முகப்பு
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் திறன் மேம்பாட்டு கழகத்தின் மண்டல அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி முகாமினை புதன்கிழமை தொடங்கி
மதுரை

மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்: 179 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்...

மதுரை

மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்: 179 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்...

Updated On : 9 அக்டோபர், 2024 at 9:07 PM
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் திறன் மேம்பாட்டு கழகத்தின் மண்டல அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி முகாமினை புதன்கிழமை தொடங்கி
பகிர்:

வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற மண்டல அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 179 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அரசு செயலா் சிஜி தாமஸ் வைத்தியன், இந்த முகாமைத் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா முன்னிலை வகித்தாா். இந்த முகாமில், 71 தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் நிறுவன பணிக்குத் தகுதியானோரைத் தோ்வு செய்தனா். மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 254 போ், விருதுநகரைச் சோ்ந்த 54 போ், ராமநாதபுரத்தைச் சோ்ந்த 72 போ், புதுக்கோட்டையைச் சோ்ந்த 65 போ், தேனியைச் சோ்ந்த 25 போ், சிவகங்கையைச் சோ்ந்த 83 போ், திண்டுக்கல்லைச் சோ்ந்த 17 போ் என மொத்தம் 570 பணி நாடுநா்கள் பங்கேற்றனா்.

இதில், 179 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 80 பேருக்கு தொழில் பயிற்சி பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

உதவி ஆட்சியா் (பயிற்சி) வைஷ்ணவி பால், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக துணை இயக்குநா் ரவீந்திரநாத் சிங், உதவி இயக்குநா் ஜெகதீசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சாமிநாதன், தொழில் வழிகாட்டி அலுவலா் வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →