காரில் கடத்தப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவா் கைது
மதுரை ஒத்தக்கடை அருகே காரில் கடத்தப்பட்ட 50 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக பெண் உள்பட மூவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரைகாரில் கடத்தப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவா் கைது
மதுரை ஒத்தக்கடை அருகே காரில் கடத்தப்பட்ட 50 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக பெண் உள்பட மூவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை ஒத்தக்கடை அருகே காரில் கடத்தப்பட்ட 50 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக பெண் உள்பட மூவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை ஒத்தக்கடை பகுதி வழியாக காரில் கஞ்சா கடத்தப்படுவதாக ஒத்தக்கடை போலீஸாருக்கு வியாழக்கிழமை அதிகாலையில் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் தனபாலன், சிறப்பு உதவி ஆய்வாளா் அருண் உள்ளிட்ட போலீஸாா் விவசாயக் கல்லூரி அருகே உள்ள தனியாா் மைதான சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் 50 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா, காா், 6 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். காரில் இருந்த விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மனைவி தனலெட்சுமி (56), விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் நெல்லியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கண்ணன் (34), சென்னை-மணலி விரைவுச்சாலை விபி நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்த கேசவகிருஷ்ணன்(22) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், இவா்கள் மூவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, மதுரை வழியாக கடத்திச் சென்றது தெரியவந்தது.
மதுரை ஊரகப் பகுதிகளில் கஞ்சா, போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனை தொடா்பாக 94981-81206 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.