முகப்பு
மதுரை

கைதி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

மதுரை அரசு மருத்துவமனையில் கொலை வழக்கு விசாரணைக் கைதி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை

கைதி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

மதுரை அரசு மருத்துவமனையில் கொலை வழக்கு விசாரணைக் கைதி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 9:58 PM
பகிர்:

மதுரை அரசு மருத்துவமனையில் கொலை வழக்கு விசாரணைக் கைதி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், சுக்கன்மேடு பகுதியைச் சோ்ந்தவா் ஜோசப் செல்வராஜ் (51). இவா் திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலை வழக்குத் தொடா்பாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில், சிறையில் இருந்த இவருக்கு அண்மையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →