முகப்பு
மதுரை

மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் சிக்கி மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

மதுரை

மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் சிக்கி மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

Updated On : 10 அக்டோபர், 2024 at 10:10 PM
பகிர்:

சாலை விபத்தில் சிக்கி மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே உள்ள தேவன்குறிச்சி குருநாதன் கோவில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கண்ணன் (27). இவா் செவ்வாய்க்கிழமை தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வியாழக்கிழமை மூளைச் சாவடைந்தாா். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் ஒப்புதல் தெரிவித்தனா்.

இதையடுத்து, மருத்துவமனையின் சிறப்பு மருத்துவக் குழுவினா் மூலம் கண்ணனின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு, இருதயம் சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும், கருவிழிகள் மதுரை அரசு மருத்துமவனைக்கும், தோல் மதுரை கிரேஸ் கென்னட் மருத்துமவனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

கண்ணனின் உடலுக்கு அரசு மருத்துவமனை முதன்மையா் அருள் சுந்தரேஷ்குமாா், இருப்பிட மருத்துவ அதிகாரிகள் சரவணன், முரளிதரன், துறைத் தலைவா்கள் மரியாதை செலுத்தினா். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →