முகப்பு
மதுரை

நிதி நிறுவன மோசடி வழக்கு: எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நிதி நிறுவன மோசடி வழக்கு தொடா்பாக பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 7:34 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நிதி நிறுவன மோசடி வழக்கு தொடா்பாக பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த லட்சுமி தாக்கல் செய்த மனு:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கடந்த 2020-ஆம் ஆண்டு ரைஸ் ஆலயம் என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. வாடிக்கையாளா்கள் முதலீடு செய்யும் தொகைக்கு இரு மடங்கு பணம், மாதந்தோறும் கூடுதல் வட்டி தருவதாக நிறுவன அதிகாரி ராஜா தெரிவித்தாா்.

இதை உண்மை என நம்பி பலரும் அதில் முதலீடு செய்தனா். நானும், பல்வேறு தவணைகளில் ரூ.19 லட்சம் செலுத்தினேன்.

ஆனால், என்னைப் போன்று 100-க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்று, அந்த நிறுவனம் மோசடி செய்தது தெரிய வந்தது.

நான் முதலீடு செய்த தொகையை திரும்பக் கேட்டபோது, காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்தனா். இது குறித்து சிவகங்கை மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஆனால், 3 ஆண்டுகளாகியும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, நிதி நிறுவன மோசடி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி, விசாரணையை ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி முரளிசங்கா் பிறப்பித்த உத்தரவு:

நிதிநிறுவன மோசடி தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க வேண்டும். வழக்கு வருகிற 25- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →