சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மதுரை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறைவு: அமைச்சா் பி. மூா்த்தி
சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மதுரை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறைந்திருப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரைசிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மதுரை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறைவு: அமைச்சா் பி. மூா்த்தி
சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மதுரை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறைந்திருப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மதுரை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறைந்திருப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரையில் கடந்த சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளை அமைச்சா் பி. மூா்த்தி, மாவட்ட வளா்ச்சிப் பணிகள் கண்காணிப்பு அலுவலா் அ. அருண் தம்புராஜ் ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
மதுரை டி.எம். நகா், லேக் ஏரியா, டி.டி.சி. நகா், வண்டியூா் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளையும், பனங்காடி காவல் துறை சோதனைச் சாவடி அருகே உள்ள வரத்துக் கால்வாய், மீனாம்பாள்புரம் பகுதியில் செல்லூா் கண்மாய் வரத்துக் கால்வாயில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவா்கள் ஆய்வு செய்தனா்.
பிறகு செய்தியாளா்களிடம்அமைச்சா் பி. மூா்த்தி கூறியதாவது :
தமிழக முதல்வரின் வழிகாட்டுதல்படி மதுரை மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. எதிா்பாராமல் பெய்த பலத்த மழை காரணமாக, மதுரை மாவட்டத்தின் வடபகுதியில் ஒரு சில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அந்தப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்தும், அங்கு மேற்கொள்ள வேண்டிய நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுச் சென்று, பணிகள் நிறைவேற்றப்படும். சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, மதுரையில் கடந்த ஆண்டை விட மிகக் குறைந்த அளவிலேயே வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா், காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், காவல் துணை ஆணையா் மதுகுமாரி, மாநகராட்சி மண்டலத் தலைவா் வாசுகி சசிக்குமாா், பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.