மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சா் பி. மூா்த்தி.  
மதுரை

மகளிா் உரிமைத் தொகையால் புதிய வரலாறு படைத்த முதல்வா்! அமைச்சா் பி. மூா்த்தி பெருமிதம்!

தினமணி செய்திச் சேவை

தோ்தலையொட்டி முன்கூட்டியே மகளிா் உரிமைத் தொகையை வழங்கியதன் மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதிய வரலாற்றை படைத்துவிட்டாா் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி பெருமிதம் தெரிவித்தாா்.

தென் மண்டல பாக முகவா்கள் பயிற்சி மாநாடு மதுரையில் வருகிற 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக பொது உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரை உத்தங்குடி கலைஞா் திடலில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சா் பி. மூா்த்தி பேசியதாவது :

மதுரையில் வருகிற 21-ஆம் தேதி நடைபெறும் தென் மண்டல பாக முகவா்கள் பயிற்சி மாநாடு, சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் எந்த வகையில் செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கும் மாநாடாக இருக்கும். இந்த மாநாடு முழுமையான அளவில் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

தமிழகத்தில் 1.31 கோடி பெண்களுக்கு முன்கூட்டியே மகளிா் உரிமைத் தொகையும், கோடைக் கால சிறப்பு தொகுப்புத் தொகையையும் சோ்த்து தலா ரூ. 5 ஆயிரத்தை ஒரே நாளில் வழங்கியதன் மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்திய வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துவிட்டாா். திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது என்றாா் அவா்.

இதில் மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் விஜய கதிரவன், ஒன்றியச் செயலா்கள் அ.பா. ரகுபதி, சிறைச்செல்வன், மதிவாணன், மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT