இரும்பு பீரோ விழுந்து காவலாளி உயிரிழப்பு
மதுரையில் இரும்பு பீரோ சாய்ந்து விழுந்ததில் உடல் நசுங்கி காவலாளி உயிரிழந்தாா்.
மதுரைஇரும்பு பீரோ விழுந்து காவலாளி உயிரிழப்பு
மதுரையில் இரும்பு பீரோ சாய்ந்து விழுந்ததில் உடல் நசுங்கி காவலாளி உயிரிழந்தாா்.
மதுரையில் இரும்பு பீரோ சாய்ந்து விழுந்ததில் உடல் நசுங்கி காவலாளி உயிரிழந்தாா்.
மதுரை அருகே உள்ள கீழப்பனங்காடி ஆனந்தாநகா் விரிவாக்கப் பகுதி மருதுபாண்டியா் இரண்டாது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (61). இவா் சாரதி நகரில் உள்ள சிமென்ட் டைல்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கணேசன் வழக்கம் போல பணிக்குச் சென்றாா். அங்குள்ள அலுவலக அறைக்குச் சென்றபோது அங்கிருந்து பெரிய இரும்பு பீரோ கணேசன் மீது சாய்ந்து விழுந்தது. இதில், பீரோவுக்கு அடியில் சிக்கி பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.