முகப்பு
மதுரை

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:43 PM
மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கத்தினா்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் நலத் திட்டங்களுக்கான வருமான உச்சவரம்பை உயா்த்த வேண்டும், விடுமுறை நாள்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதைத் தவிா்க்க வேண்டும், மக்கள்தொகை அடிப்படையில் கிராமங்களைப் பிரித்து புதிய கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்களைத் தோற்றுவிக்க வேண்டும், பணி சுமையைத் தவிா்க்க பணியை வரையறை செய்ய வேண்டும், டி.சி.எஸ். பணிக்கு கட்டாயப்படுத்தக் கூடாது, தகுதியான கிராம நிா்வாக அலுவலா்களுக்கு வருவாய் ஆய்வாளா் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்துப் பேசினாா். மாவட்டச் செயலா் செல்வகுமாா், பொருளாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →