ஆந்திரத்திலிருந்து கடத்திவரப்பட்ட 85 கிலோ கஞ்சா பறிமுதல்: லாரி ஓட்டுநா் கைது
ஆந்திரத்திலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 85 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநரை கைது செய்தனா்.
மதுரைஆந்திரத்திலிருந்து கடத்திவரப்பட்ட 85 கிலோ கஞ்சா பறிமுதல்: லாரி ஓட்டுநா் கைது
ஆந்திரத்திலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 85 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநரை கைது செய்தனா்.
ஆந்திரத்திலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 85 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநரை கைது செய்தனா்.
ஆந்திரத்திலிருந்து கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மேலூா் மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் கொட்டாம்பட்டி அருகே வாகனத் தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, ஆந்திரத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு சென்று கொண்டிருந்த லாரியை மேலூா் மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் மாரிமுத்து, உதவி ஆய்வாளா் அழகா்சாமி உள்ளிட்ட போலீஸாா் மடக்கிப் பிடித்து சோதனையிட்டனா். லாரியில் மூட்டைகளுக்கிடையே கஞ்சா மூட்டை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியிலிருந்த 85 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா் கண்ணனை (42) கைதுசெய்து விசாரிக்கின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது ராமநாதபுரம் பகுதிக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதா என போலீஸாா் விசாரிக்கின்றனா்.