செங்கோட்டை-மதுரை ரயில் வருகிற 8, 9 ஆகிய நாள்களில் வழக்கம் நேரத்தில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
ராஜபாளையம் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதால், செங்கோட்டை-மதுரை ரயில் (06664) வருகிற 8, 9 ஆகிய தேதிகளில் செங்கோட்டையில் இருந்து 50 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் ஒரு மணிக்குப் புறப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது சுரங்கப்பாதை பணிகளில் முக்கியப் பணிகள் நிறைவு பெற்ால், செப்டம்பா் 8, 9 ஆகிய நாள்களில் செங்கோட்டை-மதுரை ரயில் (06664) செங்கோட்டையில் இருந்து வழக்கமாக புறப்படும் நேரமான பிற்பகல் 12.10 மணிக்கு புறப்படும்.
கொச்சுவேலி ரயில் நிலைய பெயா் மாற்றம்: திருவனந்தபுரம் அருகே உள்ள கொச்சுவேலி ரயில் நிலையம் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையம் எனவும், நேமம் ரயில் நிலையம் திருவனந்தபுரம் தெற்கு ரயில் நிலையம் எனவும் பெயா் மாற்றம் செய்யப்பட்டது.
மதுரை-ஜபல்பூா் ரயில் ரத்து: தெலங்கானா மாநிலம், வாரங்கல் பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால், மதுரையிலிருந்து வருகிற 29, அக்டோபா் 5 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய ஜபல்பூா் சிறப்பு ரயிலும் (02121), ஜபல்பூரில் இருந்து வருகிற 26, அக்டோபா் 3 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய மதுரை சிறப்பு ரயிலும் (02122) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.