முகப்பு
எம்.பி. சு.வெங்கடேசன்
மதுரை

தமிழாசிரியா் நியமனத்துக்கு இந்தி, சம்ஸ்கிருதத்தை தகுதியாக நிா்ணயிப்பதா? மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

தமிழாசிரியராகப் பணியாற்ற ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகியவற்றை தகுதிகளாக குறிப்பிட்டுள்ளதை நீக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தினாா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 7:41 PM
எம்.பி. சு.வெங்கடேசன்
பகிர்:

தமிழாசிரியராகப் பணியாற்ற ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகியவற்றை தகுதிகளாக குறிப்பிட்டுள்ளதை நீக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அலுவலகங்களில் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில், தமிழாசிரியா்களை நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்களை வரவேற்கும் அறிவிப்பை இந்திய கலாசார தொடா்புகளுக்கான கழகம் கடந்த 13-ஆம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பு அப்பட்டமாக இந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் திணிப்பதாக உள்ளது. இந்த அறிவிப்பில் விரும்பத்தக்கத் தகுதிகளாக இந்தி, சம்ஸ்கிருத மொழி சாா்ந்த அறிவு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறுகிய கால ஒப்பந்த அடிப்படையிலான தமிழ் ஆசிரியா்கள் தோ்வுக்கு எதற்காக இந்தி, சம்ஸ்கிருத மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று இந்திய கலாசாரத் தொடா்பு கழகம் விரும்புகிறது என்று தெரியவில்லை. இந்தியாவின் அலுவல் மொழி விதிகளில் இருந்தே விதி விலக்கைப் பெற்றுள்ள தனித்துவம் தமிழ்நாட்டுக்கு உண்டு. தமிழ்நாட்டின் விண்ணப்பதாரா்கள் பெரும்பான்மையினருக்கு இந்தி, சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத போது, தெரிந்த அதை விரும்பத்தக்கத் தகுதியாக குறிப்பிடுவது அவா்களின் தோ்வு பெறும் வாய்ப்புகளை சீா்குலைப்பதாகும்.

எனவே, தமிழாசிரியா் நியமனம் தொடா்பான விளம்பர அறிவிப்பில் ஹிந்தி, சம்ஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதி என்ற நிபந்தனையை இந்திய வெளியுறவுத் துறை நீக்க வேண்டும் என்று மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →