தென்னமரத்துக்கு ஒரு குத்து! ஏணிச் சின்னத்துக்கு ஒரு குத்து!: சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்
மத்திய பாஜக அரசின் வெளியுறவுக் கொள்கை, தென்னமரத்துக்கு ஒரு குத்து! ஏணிச் சின்னத்துக்கு ஒரு குத்து! என்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம் தொடர்பாக...
குடியரசு தலைவர் உரையின் மீதான நன்றி சொல்லும் தீர்மானத்தை விவாதமின்றி நிறைவேற்றிய மத்திய பாஜக அரசின் வெளியுறவுக் கொள்கை, தென்னமரத்துக்கு ஒரு குத்து! ஏணிச் சின்னத்துக்கு ஒரு குத்து! என்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார்.
குடியரசு தலைவர் உரையின் மீதான நன்றி சொல்லும் தீர்மானத்தை விவாதமின்றி நிறைவேற்றியுள்ள மத்திய பாஜக அரசு மற்றும் இந்தியா-அமெரிக்க உறவு குறித்து எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.
அதில், தீபாவளிப் பண்டிகையை உலக பாரம்பரியங்களின் பட்டியலில் இனைத்ததற்காக யுனெஸ்கோவை குடியரசுத் தலைவர் உரையில் பாராட்டியது மோடி அரசு. அதே யுனெஸ்காகோவிற்கான நிதியை நிறுத்திய டிரம்ப் அரசுக்கானப் பாராட்டை இன்றைய பட்ஜெட் விவாத்தில் ஆளுங்கட்சியிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
Advertisement
Advertisement
தென்னமரத்துக்கு ஒரு குத்து! ஏணிச் சின்னத்துக்கு ஒரு குத்து! இதுதான் பாஜகவின் வெளியுறவுக் கொள்கை.
குடியரசு தலைவர் உரையின் மீதான நன்றி சொல்லும் தீர்மானத்தை விவாதமின்றி நிறைவேற்றியது பாஜக.
சீனாவின் நான்கு டேங்குகள் கைலாஷ் மலைப் பகுதியையும், குடியரசு தலைவர் உரையின் மீதான விவாதத்தையும் நசுக்கிச் சென்றதை மெளனத்தோடு அனுமதித்துள்ளார் பிரதமர் மோடி.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் பேசவில்லை. பேச முயன்ற எதிர்கட்சி தலைவரையும் பேச அனுமதிக்கவில்லை. ஆனால் நன்றி அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது பாஜக.
அவைக்கு உள்ளேயும், வெளியேயும் நாங்கள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் “இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக்கானது”.
இந்தியா - அமெரிக்க ஒப்பந்தம் குறித்துத் தனக்கு ஒன்றும் தெரியாது, அது பியுஷ் கோயல் அமைச்சகத்தால் கையாளப்பட்டது என்று சொல்லும் இவர்தான் நம் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்.
ராணுவம் சார்ந்த முடிவுகளையே ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் எடுக்க முடியாதபோது இது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறில்லைதான்.
இன்னும் ஒருபடி மேலே சொல்ல வேண்டுமென்றால் ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவுகள் என்னவென்பது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியானால்தான் அது பிரதமருக்கேத் தெரிய வரும் என்றால் அது ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதனால்தான் நாடாளுமன்றத்தில் பேச மறுத்தார் நம் பிரதமர் மோடி என கூறியுள்ளார்.
A punch for the coconut tree! A punch for the ladder symbol! This is the BJP's foreign policy.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.