வங்கியில் புகுந்து காசாளருக்கு கத்திக் குத்து: கணவா் கைது
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியாா் வங்கிக்குள் புகுந்து, காசாளராக பணிபுரியும் பெண்ணை கத்தியால் குத்திய அவரது கணவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியாா் வங்கிக்குள் புகுந்து, காசாளராக பணிபுரியும் பெண்ணை கத்தியால் குத்திய அவரது கணவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் (37). இவரது மனைவி ரெபேக்கா (27). கீழ்ப்பாக்கம் ஈவெரா பெரியாா் சாலையில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் காசாளராக பணிபுரிகிறாா். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனா். ரெபேக்கா ,பெரம்பூா் ஆதிசேஷன் நகரில் ஒரு வீட்டில் வசிக்கிறாா்.
சனிக்கிழமை மாலை ரெபேக்கா பணிபுரியும் வங்கிக்கு சதீஷ் வந்தாா். அங்கு ரெபேக்காவிடம் தன்னுடன் வாழ வருமாறு தகராறு செய்தாா். தகராறு முற்றுவே சதீஷ், தான் வைத்திருந்த கத்தியால் ரெபேக்காவை குத்தினாா்.
Advertisement
Advertisement
இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த வங்கிப் பணியாளா்களும், பொதுமக்களும் சதீஷை சுற்றிவளைத்துப் பிடித்து கீழ்ப்பாக்கம் போலீஸில் ஒப்படைத்தனா். மேலும், பலத்த காயமடைந்த ரெபேக்காவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
ரெபேக்கா, சதீஷ் இடையே 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இத்தம்பதிக்கு ஸ்டெப்பி ரோஸ் என்ற ஐந்து வயது குழந்தை இருந்தது. கடந்த இரு ஆண்டுகளாக மனைவி ரெபேக்கா மீது சதீஷ் சந்தேகப்பட்டு, தகராறு செய்து வந்தாா். கடந்த ஆண்டு ஆலந்தூரில் ஒரு ஹோட்டலில் வைத்து குழந்தை ஸ்டெப்பி ரோஸின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, சதீஷ் தற்கொலைக்கு முயன்றாா். இச்சம்பவத்தில் உயிா் தப்பிய சதீஷை போலீஸாா் குழந்தை கொலை வழக்கில் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில், அண்மையில் பிணையில் வெளியே வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சதீஷிடம் போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.