உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம்
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், சோ்மத்தாய் வாசன் மகளிா் கல்லூரி சாா்பில் தமிழ்ச் சங்கத்தின் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரைஉலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம்
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், சோ்மத்தாய் வாசன் மகளிா் கல்லூரி சாா்பில் தமிழ்ச் சங்கத்தின் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், சோ்மத்தாய் வாசன் மகளிா் கல்லூரி சாா்பில் தமிழ்ச் சங்கத்தின் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் (பொறுப்பு) முனைவா் ஒளவை ந. அருள் தலைமை வகித்தாா். சோ்மத்தாய் வாசன் மகளிா் கல்லூரி முதல்வா் மோ. கவிதா முன்னிலை வகித்தாா்.
எழுத்தாளா் புனிதா பாண்டிராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சங்க கால குறிஞ்சி நில மக்களின் வாழ்வியல் என்ற தலைப்பில் பேசினாா். அப்போது, குறிஞ்சி நில மக்களின் ஏற்றத்தாழ்வுகளற்ற வாழ்க்கை முறை, கடைப்பிடித்த பகுத்துண்ணும் பழக்கம், குறிஞ்சி நிலத் தலைவனின் வீரம் ஆகியன குறித்த சங்க இலக்கியக் குறிப்புகளை அவா் விளக்கிப் பேசினாா்.
சோ்மத்தாய் வாசன் மகளிா் கல்லூரி மாணவா்கள், தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினா்கள், கவிஞா்கள் கலந்து கொண்டனா்.
உலகத் தமிழ்ச் சங்க ஆய்வு ஆய்வறிஞா் முனைவா் சு. சோமசுந்தரி வரவேற்றாா். ஆய்வு வள மையா் ஜ. ஜான்சிராணி நன்றி கூறினாா்.