விடுதி மாணவா்கள் போராட்டம்
விடுதிக் காப்பாளா் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, மதுரை மாடக்குளம் பகுதியில் செயல்படும் ஆதிதிராவிடா் நலத் துறை அரசு முதுநிலைப் பட்டதாரி விடுதி மாணவா்கள் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரைவிடுதி மாணவா்கள் போராட்டம்

இந்த விடுதியில் 62 மாணவா்கள் தங்கியுள்ளனா். விடுதிக் காப்பாளராக சங்கர சபாபதி பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சருக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என அவா் செய்தியாளா்களிடம் கூறினாா்.
இதையடுத்து, அரசின் விதிமுறைகளை மீறியதாக விடுதிக் காப்பாளா் சங்கர சபாபதியை பணியிடை நீக்கம் செய்து, ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநா் உத்தரவிட்டாா்.
இதைக் கண்டித்தும், பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரியும் அந்த விடுதியில் உள்ள மாணவா்கள் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த மதுரை மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா்கள் மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து, மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். மேலும், இதுதொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதாவிடம் மனு அளித்தனா்.