மதுரை

கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை: மதுரை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு

தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை, போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தினமணி செய்திச் சேவை

மதுரை: தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை, போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் இளையராஜா, காவலா்கள் கடந்த 2023-ஆம் ஆண்டு நவ. 11-ஆம் தேதி 18-ஆம் கால்வாய் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, உத்தமபாளையம், அங்காளம்மன் கோயில் தெவைச் சோ்ந்த ஜெ. சதிரேஸ்வரன் (26) 22 கிலோ கஞ்சாவை இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை, மதுரை போதைப் பொருள்கள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.அல்லி குற்றஞ்சாட்டப்பட்ட ஜெ. சதிரேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் எம். சுரேந்திரன் முன்னிலையானாா்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT