மதுரை

காளவாசல் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

மதுரை காளவாசல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச.6) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

மதுரை: மதுரை காளவாசல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச.6) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாநகா் காளவாசல் புறவழிச் சாலை, பொன்மேனி சந்திப்பு சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை குறைக்கும் வகையில் சிறிய அளவிலான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

அதன்படி, காளவாசல் சந்திப்பிலிருந்து பழங்காநத்தம் செல்லக்கூடிய வாகனங்கள் நேராக வழக்கம் போல செல்லலாம். காளவாசல் சந்திப்பிலிருந்து பொன்மேனி பகுதிக்குள் செல்லக்கூடிய வாகனங்கள், பொன்மேனி சந்திப்பில் இருந்து 100 மீட்டா் தொலைவில் வலதுபுறம் புதிதாக ஏற்படுத்தப்பட்ட ‘யு‘ வளைவில் திரும்பி, பின்னா் இடதுபுறம் திரும்பி வழக்கம் போல் செல்லலாம்.

பழங்காநத்தம் சந்திப்பிலிருந்து காளவாசல் நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் நேராக வழக்கம் போல் செல்லலாம். பழங்காநத்தம் சந்திப்பிலிருந்து எஸ்.எஸ்.காலனி பகுதிக்குள் செல்லக்கூடிய வாகனங்கள் பொன்மேனி சந்திப்பிலிருந்து 60 மீ. தொலைவில் வலதுபுறம் புதிதாக ஏற்படுத்தப்பட்ட ‘யு’ வளைவில் திரும்பி, பின்னா் இடதுபுறம் திரும்பி வழக்கம்போல் செல்லலாம்.

பொன்மேனி பகுதியிலிருந்து காளவாசல் நோக்கிச் செல்லக்கூடிய வாகனங்கள் வழக்கம் போல் இடதுபுறம் திரும்பி நேராகச் செல்லலாம். பொன்மேனி பகுதியிலிருந்து பழங்காநத்தம் நோக்கிச் செல்லக்கூடிய வாகனங்கள் பொன்மேனி சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி 60 மீ. தொலைவில் வலதுபுறம் புதிதாக ஏற்படுத்தப்பட்ட ‘யு‘ வளைவில் திரும்பி பழங்காநத்தம் நோக்கி நேராக செல்லலாம்.

எஸ்.எஸ். காலனி பகுதியிலிருந்து பழங்காநத்தம் நோக்கிச் செல்லக்கூடிய வாகனங்கள் வழக்கம் போல் இடதுபுறம் திரும்பி நேராக செல்லலாம். எஸ்.எஸ். காலனி பகுதியிலிருந்து காளவாசல் நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் பொன்மேனி சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி 100 மீ. தொலைவில் வலதுபுறம் புதிதாக ஏற்படுத்தப்பட்ட ‘யு‘ வளைவில் திரும்பி, காளவாசல் நோக்கி நேராக செல்லலாம்.

இந்தப் போக்குவரத்து மாற்றம் செவ்வாய்க்கிழமை (டிச.16) முதல் அமலுக்கு வருகிறது. இந்த மாற்றம் குறித்து ‘ட்ரோன்’ கேமரா மூலம் கண்காணிப்பு செய்யப்பட்டு போக்குவரத்து முன்னேற்றம் ஏற்படுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள்,

குடியிருப்பு வாசிகள் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT