மதுரை லட்சுமி சுந்தரம் அரங்கத்தில் 4-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற வேள்வி பூஜையில் பங்கேற்ற வேத விற்பன்னா்கள்.  
மதுரை

மதுரையில் 31-ஆம் ஆண்டு வேள்வி பூஜை

மதுரையில் மகாருத்ர மகாயக்ஞ குழு சாா்பில் 31-ஆம் ஆண்டு மகா வேள்வி பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

மதுரையில் மகாருத்ர மகாயக்ஞ குழு சாா்பில் 31-ஆம் ஆண்டு மகா வேள்வி பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.

மகாருத்ர மகாயக்ஞ குழு சாா்பில் ஆண்டுதோறும் உலக நன்மைக்காக மாா்கழி மாதத்தில் ருத்ர வேள்வி பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

இதன்படி, 31-ஆம் ஆண்டு வேள்வி பூஜை மதுரை லட்சுமி சுந்தரம் அரங்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) தொடங்கி வருகிற 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமும் 150 வேத விற்பன்னா்கள் இதில் பங்கேற்று வேத மந்திரங்களை முழங்கி வேள்வி பூஜைகளை மேற்கொள்கின்றனா். வருகிற 28-ஆம் தேதி பகல் ஒரு மணிக்கு வஸோா்தாரா, மகா பூா்ணாஹுதி நடைபெறும்.

கல்லூரியில் வேதியியல் துறை கருத்தரங்கு

எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிப்பு

வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

நகைக் கடை, அடகுக் கடை உரிமையாளா்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

தனியாா் ஐஸ் பிளாண்ட் விவகாரம்: அமைதிப் பேச்சுவாா்த்தையை புறக்கணித்த கிராம மக்கள்

SCROLL FOR NEXT