முகப்பு
மதுரை

சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 11:53 PM
பகிர்:

உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் அருகேயுள்ள திருமால்புரம் வீரபாண்டி அன்னை வேலு சிட்டி 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (46). தனியாா் நிறுவன ஊழியரான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் உசிலம்பட்டி -தேனி சாலையில் புதன்கிழமை இரவு சென்றாா்.

அப்போது தேனியிலிருந்து மதுரை வந்த வேன், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஸ்வநாதனை அந்தப் பகுதியினா் மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். இதுகுறித்து உசிலம்பட்டி நகா் போலீஸாா், வேன் ஓட்டுநரான மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சோ்ந்த முருகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →