மதுரையில் ரௌடி வெட்டிக் கொலை! நண்பர் படுகாயம்!
6 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்
மதுரை : மதுரையில் ரௌடி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் வசித்து வந்த கருமலையும் அவருடன் பழகி வந்த பாலமுருகனும் நண்பர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தநிலையில், ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று கருமலையை வெட்டிக் கொன்றுவிட்டு செல்லத் திட்டமிட்டனர். கருமலை ரௌடித்தனம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அதன்படி சம்பவ இடத்துக்கு சென்றபோது கருமலையுடன் பாலமுருகனும் இருந்ததால் இருவரையும் வெட்டிவிட்டு அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
Advertisement
Advertisement
அதில் கருமலை உயிரிழந்தார். பாலமுருகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருமலை கொலை குறித்து காவல் துறை வழக்குப்பதிந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. மாயமான நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன் விரோதம் காரணமாக கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
Rowdy hacked to death in Madurai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.