மதுரையில் ஜே.சி.பி.யை இயக்கி 25 வாகனங்களை நொறுக்கிய சிறுவன்!
மதுரையில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கிய சிறுவனால் விபத்து...
மதுரையில் ஜே.சி.பி. இயந்திரத்தை இயக்கிய சிறுவன் இன்று அதிகாலை சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்களை இடித்து நொறுக்கினார்.
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் 17 வயது சிறுவன் திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கியுள்ளார்.
இதையும் படிக்க : 78 ஆண்டுகளுக்கு பிறகு வீரப்பன் மறைவிட கிராமத்துக்கு மின்சாரம்!
செல்லூர் 50 அடி சாலையில் ஜேசிபி இயந்திரத்தை வேகமாக இயக்கியபோது, சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் உள்பட சுமார் 25 வாகனங்கள் கடும் சேதமடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜேசிபி ஓட்டிய சிறுவனைப் பிடித்த மக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து, அந்த சிறுவனை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
ஜேசிபி இயந்திரத்தை இயக்கிய சிறுவன் போதையில் இருந்ததாகவும் அவரைப் பிடித்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை நேரம் என்பதால் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.